தலைப்புச் செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சை பொருளாதார வினாத்தாள் கசிந்தமை குறித்து முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளாதார வினாத்தாள் – பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறும் அறிக்கைகளை விசாரிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பரீட்சைத் திணைக்களம் முறையிட்டுள்ளது.

கடந்த வாரம் பரீடசைகள் பிரதி ஆணையாளர் – இந்த முறைப்பாட்டை வழங்கியதாக, பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய பொருளாதார வினாத்தாள் கசிந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும், ஒரு உள்ளக விசாரணையைத் தொடர்ந்து, அத்தகைய சம்பவம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த விஷயத்தில் முறையான விசாரணையை உறுதி செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறையிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.