
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பிரபல கைதியொருவர் சிறைச்சாலை வளாகத்திற்குள் சுதந்திரமாக கைத்தொலைபேசி பயன்படுத்துவதைக் காட்டும் வீடியோ – சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணொளியில், போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கைதி கைத்தொலைபேசியை பயன்படுத்தும் நிலையில், மற்றொரு கைதிக்கு தலையில் மசாஜ் செய்யப்படுகிறது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள நபர் – தற்போது பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளி என்று கூறப்படுகிறது.
அதன்படி, இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பூசா சிறைச்சாலைக்குள் இந்த சம்பவம் நடக்கவில்லை என, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகத் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பூசா, காலி மற்றும் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


