தலைப்புச் செய்திகள்

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி பலி

அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஒரு தொழிலதிபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான நபர் – பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. வூட்லர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை நிற வாகனத்தில் வந்த ஒரு குழுவினர் இந்தத் தாக்குதல் நடத்தி விட்டு, உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் – ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராக சந்தேகிக்கப்படும் கரந்தெனிய சுத்தா என்பவரின் மூத்த சகோதரியின் கணவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நான்கு தனித்தனி குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.