தலைப்புச் செய்திகள்

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் 53 கிலோகிராம் ஹெரோயின்

தெற்கு கடலில் 53 கிலோகிராம் ஹெரோயினுடன் படகு ஒன்றை – கடற்படையினர் இன்று (17) கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு காலி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டப்பட்டது.

படகில் மொத்தம் 53 கிலோகிராம் ஹெரோயின் கொண்டு செல்லப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு, அதன் குழுவினருடன் காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பொதிகளை ஏற்றிச் சென்ற படகு, சில நாட்களுக்கு முன்பு தெற்கு கடலில் கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் படகில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.