
பெண் பொலிஸ் அதிகாரி வருணி கேஷல போகாவத்தவின் புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசேட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.
மிரிஹான பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகரின் உருவப்படத்துக்கே இவ்வாறு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் உத்தரவின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பொலிஸ் அதிகாரி இல்லாத நேரத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபரொருவர், அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியின் பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்தில் ஒரு வெள்ளை மலர் மாலையை தொங்கவிட்டுள்ளார் என, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் செயல், குறித்த பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மிரிஹான பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷல போகாவத்த – தற்போது காய்ச்சல் காரணமாக நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


