
அடுத்த கல்வியாண்டில் தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் – இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வியமைச்சர் மதுர செனவிரத்ன கூறினார்.
எனவே, இந்த தரங்களில் உள்ள மாணவர்களுக்கு – செயல்பாட்டு புத்தகங்கள் (activity books) மற்றும் மட்டு கற்றல் பொருட்கள் (modular learning materials) வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த தரங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடுதல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் கூறினார்.

இதன் விளைவாக இந்த தரங்களில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலைப் பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


