தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பிக்கு அந்தக் கட்சியின் செயலாளர் எச்சரிக்கை

பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி – பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திஸ்ஸ குட்டிஆராச்சி சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமையின் காரணமாக, கட்சிக்குள் அதிருப்திகள் நிலவுகின்றன. இதனாலேயே இவ்வாறானதொரு கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (25) அவர் கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய திஸ்ஸ குட்டிஆராச்சி; “நாமல் ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகும் நாளில், நான் அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதியாக இருப்பேன். நான் அவரின் நெருங்கிய நண்பர், நம்பிக்கைக்குரியவர்” எனக் கூறியிருந்தார்.

திஸ்ஸ குட்டிஆராச்சிக்கு இந்த எச்சரிக்கையை தொலைபேசி மூலம் – சாகர காரியவசம் விடுத்தார் என, ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.