தலைப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை தவிசாளர் 47 வயதில் திடீர் மரணம்

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க – திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) உயிரிழந்தார்.

வழமை போல் இன்று (காலையும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென சுகவீனமடைந்த அவர், கரந்தெனிய – போர்லந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்தார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

47 வயதுடைய மஹில் முனசிங்க, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு, கரந்தெனிய பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் முனசிங்க மாரடைப்பினால் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.