தலைப்புச் செய்திகள்

பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு குர்ஆன் பிரதிகளை அஸ்வர் சாலிஹ் வழங்கினார்

பாலமுனை லஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரிக்கு 100 குர்ஆன் பிரதிகளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், ‘அல்குர்ஆன் சொசைட்டி’ அமைப்பின் பணிப்பாளருமான ஐ.எல். அஸ்வர் சாலிஹ் இன்று (21) வழங்கி வைத்தார்.

ஸஹ்வா ஆண்கள் அறபுக் கல்லூரியின் அதிபர் ஏ.ஆர். றமீம் மதனி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய – இந்த குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டன.

‘அல்குர்ஆன் சொசைட்டி’ மூலம் – நீண்ட காலமாக குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், கல்லூரியின் உதவிச் செயலாளர் எஸ்.எச். தம்ஜீத் (EDO) மற்றும் அல்குரான் சொசைட்டி அமைப்பின் பாலமுனை ஒருங்கிணைப் பாளர் ஏ.எல்.எம். றனீஸ் (MSO) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.