
மத்திய கலாச்சார நிதியத்தின் ஆளுநர் குழுவின் அனுமதியின்றி 08 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினர், இதில் பெரியளவிலான நிதி முறைகேடு நடந்துள்ளமையைக் கண்டுபிடித்துள்ளனர் என்றும், பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
மேற்படி விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக, அவர்களின் பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.



