
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்சித் தடைகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவை செயல்படுத்தும்போது ஏற்படக்கூடிய சட்டரீதியான தாக்கங்களை ஆராய, முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான ஒரு விசேட குழுவை குழுவையும் – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நியமித்துள்ளது.
முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதிலிருக்கும் தடைகளை நீக்கும் என்று, அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
ஐ.தே.கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.

ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் கைது செய்யப்பட்டதிலிருந்து, ஒன்றிணைந்த அரசியல் முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒத்துழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு முன்மொழிவும் கூட்டத்தின் போது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



