தலைப்புச் செய்திகள்

சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் மேலதிக ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி

2025ஆம் ஆண்டு – சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் திட்டத்திற்கு அரசு ஒருக்கிய 6,000 மில்லியன் ரூபாயில், நெல் சந்தைப்படுத்தல் சபை ஏற்கனவே 16 மாவட்டங்களில் ரூ. 5,288 மில்லியனைப் பயன்படுத்தி 43,891 மெட்ரிக் டொன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது.

இந்த நிலையில் நெல் அறுவடை இன்னும் நடைபெற்று வரும் பொலன்னறுவை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு சபை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் 2025 சிறுபோகத்துக்கு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவைச் செய்வதற்கு, மேலதிக ஏற்பாடுகளைச் செய்வதற்காக – விவசாய அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.