தலைப்புச் செய்திகள்

போக்குவரத்து சபையில் பெண் சாரதிகள், நடத்துநர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள்: அமைச்சர் பிமல்

இலங்கை போக்குவரத்து சபையின் பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் கூறினார்.

மரியானா அகழி ஆழத்தை விடவும் பெரிய ஆழத்தில் இலங்கை போக்குவரத்து சபை விழுந்துள்ளதாகவும், அதன் அழிவுக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

போக்குவரத்து சபை டிப்போகள் – குறைபாடுகள் நிறைந்தவையாக மாறிவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை போக்குவவரத்து சபையில் ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்தநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், போக்குவரத்து சபை – லாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டமைக்கப்படும் என்றார்.