தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவு விபரத்தை அரசாங்கம் வெளியிட்டது

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்கான செலவுகளுக்காக, 2017ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை மொத்தம் 49 கோடி12 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் (491,203,422 ரூபாய்) செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் ஓய்வூதியம், வாகனங்கள் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகளுக்காக, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளடக்கியது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹேமா பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2017 முதல், மைத்திரிபால சிறிசேன 2019 முதல், கோட்டாபய ராஜபக்ஷ 2022 முதல், மற்றும் ரணில் விக்ரமசிங்க 2024 தொடக்கம் பெற்றுக் கொண்ட சலுகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்காக – சந்திரிக்கா, மஹிந்த, மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஓய்வூதியமாக ஒவ்வொருவருக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க 318500 ரூபாய் பெற்றுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பிரேதாசவின் மனைவிக்கு 2024ஆம் ஆண்டு 780,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது.