தலைப்புச் செய்திகள்

‘முற்றிலும் தவறானது’: ஹிரு செய்திக்கு, பிரதமர் அலுவலகம் மறுப்பு

வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரினி அமரசூரிய காணச் சென்றார் என வெளிவந்த செய்தி தவறானது என என பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஹிரு செய்தி நிறுவனம் இன்று (25) ‘பிரதமர் ஹரிணி மைத்திரியுடன் நள்ளிரவில் ரணிலைப் பார்க்க வந்தார்’ எனும் தலைப்பில் வெளியிட்ட குறித்த செய்தி, முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற தவறான மற்றும் நெறிமுறையற்ற செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டமைக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும், மேலும் இந்த செய்தியை உடனடியாக சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்தி கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ஹிரு நிறுவனத்தைக் கேள்டுக் கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் நேற்றிரவு – ரணில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலைக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய சென்றதாகவும், அங்கு இரண்டு மணி நேரம் இருந்ததாகவும் ஹிரு செய்தி வெளியிட்டிருந்தது.

தொடர்பான செய்தி: ரணிலைப் பார்க்கச் சென்ற பிரமர் ஹரினி: மைத்ரியும் உடன் சென்றதாக தகவல்