
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு விசேட சிகிக்சை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விளக்க மறியலில் நேற்று (23) வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அரச நிதியை பிழையாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்கவை நேற்று சிஐடியினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமையை அடுத்து, அவரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் காணுங்கள்


