தலைப்புச் செய்திகள்

நீரிவுக்கு 21 வீதமானோர் மட்டுமே தொடர் சிகிச்சை பெறுகின்றனர்

நாட்டிலுள்ள நீரிழிவு நோயாளிகளில் 21 வீதமானோர் மட்டுமே தொடர்ச்சியான சிகிச்சையைப் பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் சுமார் 25 வீதமானோர் வழக்கமான சிகிச்சையைப் பெறுவதாக, சுகாதாதார அமைச்சின் தரவுகள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள 24 சிறைச்சாலை வைத்தியசாலைகளில் விசேட வைத்தியத் திட்டமொன்றை தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, நாட்டில் தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டினார்.

தொற்றாத நோய்களின் அதிகரிப்புக்கு – மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் காரணம் என்றும், நோய் முகாமைத்துவத்துக்கு தடையற்ற சிகிச்சையின் அவசியம் எனவும் அவர் கூறினார்.

கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர் என்றும், அதேநேரம் ஆண்கள் மற்றும் தொழில்நிபுணர்கள் இவ்வாறான பரிசோதனைகளில் ஈடுபடும் வீதம் குறைவாகவே உள்ளதாகவும் அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி அமைச்சர் தகவல்களை வெளியிட்டார்.