தலைப்புச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஜூலை மாதத்தில் இதுவரை 145,188 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என, சுற்றுலாப் பயணிகள் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தியாவிலிருந்து ஜூலை மாதத்தில் 27,786 சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தந்துள்ளனர். அதேபோன்று இந்த வருடத்தில், மொத்தம் 269,780 இந்தியர்கள் – இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்தது 16,750 பேர் வந்துள்ளனர். இந்த வருடத்தில் 124,652 பிரித்தானியர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

ஜுலை மாதத்தல் நெதர்லாந்திலிருந்து 10,809 பேர், பிரான்ஸ் நாட்டிலிருந்து 7,732 பேர், மற்றும் சீனாவிலிருந்து 5,904 பேர் வருகை தந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்போது 1,313,232 ஐ எட்டியுள்ளது. அந்த வகையில், இந்த புள்ளி விபரமானது சுற்றுலாத்துறையில் உயர்வைக் காட்டுகிறது.