
பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இம்மாதம் 27 ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள பிரதம நீதியரசர் முர்து பெனாண்டோவுக்குப் பின்னர், நீதியரசர் சூரசேனவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்தார்.
இதனையடுத்து, நேற்று கூடிய (23) அரசியலமைப்பு சபை, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன – முன்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பணியாற்றினார். மேலும் இந்த ஆண்டும் அவர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

எதிர்வரும் வரும் நாட்களில் இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை, ஜனாதிபதி பரிந்துரைத்தார்



