
ரஷ்யாவின் கிழக்கிலுள்ள அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் இறந்துவிட்டதாக அவசர சேவைகளின் முதற்கட்ட தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் – விபத்துக்கான விமானத்தின் எரியும் பகுதிகளைக் கண்டுபிடித்ததாக ரஷ்ய அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
விமானம் பிளாகோவெஷ்சென்ஸ்கில் இருந்து டின்டாவுக்கு ஐந்து குழந்தைகள் உட்பட 43 பயணிகளுடன் பயணித்தது. அதில் 06 பணியாளர்களும் இருந்தனர்.

ரஷ்ய அறிக்கைகளின்படி, விமானியின் பிழை மற்றும் காட்சி தெளிவின்மை ஆகியவை விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.



