தலைப்புச் செய்திகள்

வாகன இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் இல்லை

வாகன இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், சந்தை திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ வாகன இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நேற்று செவ்வாய்கிழமை ஊடகிவியலாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

“எனக்குத் தெரிந்தவரை, அரசாங்கம் அத்தகைய முடிவு எதையும் எடுக்கவில்லை. எந்த மாற்றமும் இல்லை என்பதை அமைச்சர் உறுதிப்படுத்தி அறிக்கையை வெளியிடுவார் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.