
மஹியங்கணை பகுதியில் பதினைந்து வயது பிள்ளையொருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் பதுளை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார்.
உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் நேற்று (08) நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். பிள்ளைகள் வகுப்புகளுக்குச் செல்வதாகவும், காட்டில் வெவ்வேறு நபர்களுடன் நாளைக் கழிப்பது போன்ற சாக்குப்போக்கில் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.
“சொரபோரா குளத்தின் ஒதுக்குப்புறத்தில் சுமார் 15 பாடசாலை மாணவர்களைக் காட்டில் கண்டுபிடித்த பிறகு, பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மஹியங்கனை பகுதியில் 15 வயது பிள்ளையொன்றுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அவர்களின் சம்மதத்துடன் கூட – துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, “சிறுவர்கள் தங்கள் நிறத்தை மாற்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்தில் உள்ளனர், இதன் விளைவாக தோல் நோய்கள் ஏற்படுகின்றன. வைத்திய ஆலோசனை இல்லாமல் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கை அழகைக் கெடுத்து, சருமத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். திருமணமான ஒரு பெண்ணின் விஷயத்தில் அழகுசாதனப் பொருட்களுக்காக வீணான செலவுகள் குடும்பத் தகராறுகளுக்கு வழிவகுக்கும். குடும்ப நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய தங்கள் கணவர்களின் சம்பாத்தியத்தை அவர்கள் வீணாக்குகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.



