கைது செய்யப்படுகிறார் தம்மாலோக தேரர்; சட்டமா அதிபர் அனுமதி, புலனாய்வு பிரிவினரும் தயார்

🕔 February 21, 2016

Uduwe thammaloka Thero - 014டுவே தம்மாலோக தேரரை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் எவையும் இன்றி, யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்படவுள்ளார்.

வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியதை அடுத்த், இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

தேரரைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடுவே தம்மாலோக தேரரைக் கைது செய்யும் வேளையில், பதட்டமான சூழ்நிலைகள் ஏதாவது எழுக்கூடும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அஞ்சுவதாகவும், அதனால் ஜனாதிபதி நாட்டில் இருக்கும் போது – இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல தடவை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, அவை தொடர்பான அறிக்கைகளை முன்னாள் சட்டமா அதிபர் பதவியில் இருக்கும்போதே அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

ஆயினும், முன்னாள் சட்ட மா அதிபர் இந்த விடயத்தை இழுத்தடித்து வந்திருந்தார்.

இந்த நிலையில், உடுவே தம்மாலோக தேரரைக் கைது செய்வதற்கு, புதிய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்