அண்ணன் சிறையில், தம்பி பாடல் வெளியீடு: ரோஹித ராஜபக்ஷவின் காதல் சோகம்

🕔 February 21, 2016

Rohitha - 09876ஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புல்வர் ரோஹித ராஜபக்ஷ, பாடலொன்றினைப் பாடி வெளியிட்டுள்ளார்.

‘மன்முல வெலா’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிங்கள மொழிப் பாடலானது, இழந்து போன காதலின் அவஷ்தையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்தப் பாடலின் வரிகளை ரோஹித எழுதியுள்ளதோடு, இதற்கான இசையினையும் அவரே அமைத்துள்ளார். இது அவரின் முதல் பாடலாகும்.

தற்போது, இந்தப் பாடல் வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

நேற்று சனிக்கிழமை ‘யு டியுப்’ (You Tube) இல் பதிவேற்றப்பட்ட இந்தப் பாடலை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய குடும்பத்தாருக்கு எதிராக அடிக்கடி விசாரணைகள் இடம்பெற்று வரும் தருணத்தில், ரோஹிதவின் இந்தப் பாடல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்