
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று இரவு (02) இரவு 8.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை, நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக – இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படுகிறது.
தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை நிலையப் பொறுப்பதிகாரி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
எனவே, பாவனையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.



