
எரிபொருள்களின் விலைகளை இன்று நள்ளிரவு (30) தொடக்கம் அமுலாகும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 289 ரூபாயட.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 07 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாய்.
ஒக்டென் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாக இருக்கும்.
மாதாந்த எரிபொருள் எரிபொருள் விலைத் திருத்தங்களுக்கு ஏற்ப, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



