
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவரின் பதவிக் காலத்தில் விமானங்களை வாங்கியமை தொடர்பில் நடந்து வரும் விசாரணைகளின் கீழ் – இவர் கைதாகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரான நிஷாந்த விக்ரமசிங்க, அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவைராக இருந்தபோது, பல மில்லியன் டொலர் விமான ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவராக 2008ஆம் ஆண்டு தொடர்கம் 2015ஆம் ஆண்டு வரை இருந்தார்.



