
அமெரிக்க தாக்குதல்கள் ஈரான் அணுசக்தி நிலையங்களில் ‘நினைவுச் சின்ன சேதத்தை’ ஏற்படுத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதத்தை குறைத்துக் கூறும் ஈரானின் முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
“செயற்கைக்கோள் படங்களால் காட்டப்பட்டுள்ளபடி, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி நிலையங்களுக்கும் நினைவுச்சின்ன சேதம் ஏற்பட்டது. அழிப்பு என்பது ஒரு துல்லியமான சொல்” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“மிகப்பெரிய சேதம் தரை மட்டத்திற்கு கீழே நடந்தது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அறிக்கையிட்டுள்ளதைப் போல, ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், பெரிதும் வலுவூட்டப்பட்ட ஃபோர்டோ தளத்தின் செயற்கைக்கோள் படங்கள் மூன்று இடங்களில் சேதத்தைக் காட்டுகின்றன. அவற்றில், பதுங்கு குழியில் வெடித்த குண்டுகளால் ஏற்பட்ட இரண்டு பள்ளங்கள் மற்றும் அணு உலையைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சேதமடைந்த வான் பாதுகாப்பு தளம் என்பன அடங்கும்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவரான ரஃபேல் க்ரோஸி முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர அமர்வில், ஆழமான நிலத்தடியில் அமைந்துள்ள ஃபோர்டோவிற்கு உண்மையான சேதம் தெரியவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



