
இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் முழுவதும் குறைந்தது 585 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் – வொஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும் 126 பேர் பாதுகாப்புப் படையினர் என்றும் அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.
மோதலின் போது ஈரான் வழக்கமான இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை. திங்களன்று வெளியிடப்பட்ட அதன் கடைசி புதுப்பிப்பில், 224 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,277 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.



