
ராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகிய, 45 வயதுக்குட்பட்ட 10,000 நபர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நபர்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவைப் பத்திரம் – இன்று (9) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



