தலைப்புச் செய்திகள்

பிரபாகரனின் ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக அர்ச்சுனா எம்.பி தெரிவித்தமையை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் – சமீபத்தில் சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கூறியமையை, பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அந்த விடயம் ‘முற்றிலும் ஆதாரமற்றது எனவும் பொய்யானது’ என்றும் நிராகரித்துள்ளார். மேலும் அத்தகைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு விஷயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.