தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 12 பேர், வழக்கிலிருந்து இன்று விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து இன்று (16) விடுவிக்கப்பட்டனர்.

மேற்படி நபர்கள் மீது – பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக, நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறு ஆய்வு செய்த பின்னர், அவர்களுக்கு எதிராக மேலும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, ஏப்ரல்மாதம் 09ஆம் திகதியன்று சட்டமா அதிபர்அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி மேற் குறிப்பிடப்பட்ட, பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசு தரப்பு நடவடிக்கை எடுத்தது.