சுகாதார அச்சுறுத்தலில் வடக்கின் பஸ்கள்; அதிகாரிகள் எங்கே?

🕔 June 8, 2015

Bus - 02– பாறுக் ஷிஹான் –

டக்கு மாகாணத்தில் பாவனையிலுள்ள போக்குவரத்து பஸ்களில் கணிசமானவை, மிக மோசமான நிலைமையில் காணப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, இந்த பஸ்களில் அதிகமானவை – சுற்றாடலை மாசுபடுத்தும் வகையில், மிக அதிகமான புகையினை வெளியிடுகின்றவையாக உள்ளன என்றும், இதனால் – பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மட்டுமன்றி,  தனியாருக்குச் சொந்தமான பஸ்களும் – முறையான கவனிப்பின்றி, மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில்இ இவ்வாறு வலம் வருகின்றன.

சூழலை மாசுபடுத்தும் வகையிலும், மனிதர்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் புகையினை வெளிப்படுத்தம் இவ்வாறான வாகனங்களுக்கு – போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கிய அதிகாரிகள் யார் எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இதேவேளை, இந்த பஸ் வண்டிகள் புகைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எவ்வாறு போக்குவரத்து அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருக்க முடியும் என்கிற சந்தேகம் எழுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.Bus - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்