விருதுகள் வழங்கி கௌரவிப்பு

🕔 June 8, 2015

யாழ் கொட்டடி - விருது - 02– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கம், சனசமூக நிலையம் மற்றும் மலையக கலை கலாச்சார சங்கம் ஆகியவை  இணைந்து நடாத்திய புத்தாண்டு விழாவில், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவோர் –  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலையக் கட்டிட முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ் விழா நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலையத்தின் தலைவர் நா. தனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இந்திய தூதரக துணைத் தலைவர் ஏ. நடராஜன் பிரதம விருந்தினராகவும், யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ துறைப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

இதன் போது – பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 33 பேர்இ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் சமூக திலகம் விருது 12 பேருக்கும், ரத்தீன தீபம் விருது 21 பேருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை – கலை கலாச்சாரம், விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும் இங்கு பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர்.யாழ் கொட்டடி - விருது - 01யாழ் கொட்டடி - விருது - 06யாழ் கொட்டடி - விருது - 03யாழ் கொட்டடி - விருது - 04

Comments

புதிது பேஸ்புக் பக்கம்