சம்மாந்துறையில் புதிய நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

🕔 June 7, 2015

Paddy - Samm - 01– எம்.சி. அன்சார் –

விவசாய அமைச்சின் 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சம்மாந்துறை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரமான தயா கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விவசாய மற்றும் நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே,  பிராந்திய விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. லத்தீப், பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி  அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஏச்.எம். நபார், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும், ஓய்வு பெற்ற வைத்தியருமான எம்.வை. முஸ்தபா, கிராம சேவை அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.Paddy - Samm - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்