தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 18 பேர் இதுவரை கைது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில், இந்தத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 03 முதல் நேற்று 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தக் காலகட்டத்தில் 62 அரசியல் கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 14 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான 38 குற்ற முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 138 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.