தலைப்புச் செய்திகள்

02 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மரண விசாரணை அதிகாரி மற்றும் உதவியாளருக்கு விளக்க மறியல்

பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதற்காக 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட அனுராதபுரம் நகராட்சி மரண விசாரணை அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் – விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று (17) இவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அனுராதபுரம் நகராட்சி மரண விசாரணை அதிகாரி முதியன்சலாகே ஜெயதிலக மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் – மரணமடைந்த மாமாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தாமதமாகியள்ளது. குறித்த அறிக்கையை வழங்கவும் இறப்புச் சான்றிதழுக்கான தேவையான விண்ணப்பத்தை நிரப்பவும் சந்தேக நபர்கள் 2,000 லஞ்சமாகக் கோரியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் அனுராதபுரம் சந்தைப் பகுதியில் வைத்து, லஞ்சம் – ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, அவர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கொழும்பு பிரமத நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.