
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை வன்புணர்ந்த சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
37 வயதுடைய பெண் மற்றும் 27 வயதுடைய ஆண் ஆகிய இரு சந்தேக நபர்களும் நேற்று (12) இரவு கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கும் வகையில் அவரின் சகோதரி உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
அதேவேளை, சந்தேக நபர் திருடிதாகக் கூறப்படும் கைத்தொலைபேசி மற்ற நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தேக நபரான கல்னேவவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் இன்று (13) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
பிரதான சந்தேக நபர் – கல்னேவவில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது, கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் விசேட அதிரடிப் படையினரும் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கத்தியை பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.



