
கணிதப்பாட ஆசிரியர் ஒருவர், 10 ஆம் வகுப்பு மாணவிகள் எட்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அரலகங்வில பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்புலாகல கல்வி வலயத்திலுள்ள அரலகங்வில கல்விப் பிரிவிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே இவ்வாறு கைதானார்.
ஆசிரியரின் நடத்தை குறித்து பெற்றோர்கள் அளித்த பல புகார்களைத் தொடர்ந்து இந்த கைது நடந்ததாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களைத் தாக்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் இன்று (07) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அரலகங்வில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பணியகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.



