
ஹெரோயின் போதைப்பொருள், ஒரு ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கி மற்றும் 04 தோட்டாக்களுடன் ராஜகிரிய – ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (07) நடத்தப்பட்ட சோதனையின் போது 102 கிராம் ஹெரோயினுடன் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு 15 இல் உள்ள முத்துவெல்ல மாவத்தையில் வசிப்பவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



