தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி அபகரித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (06) மூன்று சந்தேக நபர்களையும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா – நேற்று பத்தரமுல்லையில் உள்ள அவரின் வீட்டில் வைத்து, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தயட்சகர் புத்திக மனதுங்க, இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

கிரிபத்கொடவில் அமைந்துள்ள ஒரு காணி தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சரை சிஐடி கைது செய்ததாக எஸ்எஸ்பி பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் நீண்ட விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.