தலைப்புச் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகப் பயணித்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்: பொலிஸ் பேச்சாளர்

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நுகேகொடயில் இருந்து கண்டி நோக்கி கடந்த திங்கட்கிழமை (03) மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி நபர் – நிர்வாண நிலையில் காணப்பட்டமையை அடுத்து, அவரை கடுகண்ணாவையில் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை நேற்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. பின்னர் அவர் நீதிமன்றில் மீண்டும் நேற்று (05) ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்தும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காரியவசம் பதிரகே கவீச சம்சார காரியவசம் எனும் பெயருடைய 23 வயது நர்தான் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் அஹங்கம பகுதியில் உள்ள குருல்லவலவைச் சேர்ந்தவராவார்.

தொடர்பான செய்தி: நிர்வாண ஆசாமிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்: மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவு

இதையும் பாருங்கள்