தலைப்புச் செய்திகள்

நிர்வாண ஆசாமிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்: மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவு

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.

காரியவசம் பதிரகே கவீச சம்சார காரியவசம் எனும் பெயருடைய 23 வயது சந்தேக நபர், அஹங்கம பகுதியில் உள்ள குருல்லவலவைச் சேர்ந்தவராவார்.

இவர் கடந்த திங்கட்கிழமை (03) கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த போது, நிர்வாணமான நிலையில் கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் அவரை மனநல வைத்தியரிடம் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பவும், அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்பான செய்தி: நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபர்: பொலிஸாருக்கு ‘தண்ணி’ காட்டிய நிலையில், கடுகண்ணாவையில் அகப்பட்டார்