
நிதி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டியுள்ள தினமின பத்திரிகை, இந்த வாகனங்கள் இருப்பதை சரிபார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.
இந்த வாகனங்களில் 99 வாகனங்களுக்கு எந்த தகவலும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட 176 வாகனங்கள் தொடர்பான விவரங்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாக, கணக்காய்வாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் உரிமை மற்றும் இருப்பை சரிபார்க்குமாறு கணக்காய்வு அலுவலகம் அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க டிசம்பர் 31, 2023 நிலைவரப்படி, அமைச்சு 44 வாகனங்களை முறையாக உரிமை மாற்றாமல் பிற நிறுவனங்களுக்கு விடுவித்துள்ளது.
முறையான பரிமாற்ற நடைமுறைகளை முடிக்காமல் 11 வாகனங்கள் பிற நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்டதாகவும் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.



