தலைப்புச் செய்திகள்

நாட்டில் மதுபான நுகர்வு குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தகவல்

லங்கையின் சட்டப்பூர்வ மதுபான நுகர்வு 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில்ஆண்டுக்கு ஆண்டு 9.5 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு குறைவடைவதற்கு வரி அதிகரிப்புகாரணம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்த சட்டப்பூர்வ மதுபான நுகர்வு 27.2 மில்லியன் லீட்டராகக் குறைந்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 28.2 மில்லியன் லீட்டராக இருந்தது.

2024 ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் மதுபானங்கள் மீதான கலால் வரிகளை 14 சதவீதம் உயர்த்தியதால், மதுபான நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது.

நுகர்வில் குறைவு இருந்தபோதிலும், மதுபானங்களுக்கான கலால் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 20.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி 2024ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 167.7 பில்லியன் ரூபாய் வரியாக கிடைத்துள்ளது. 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 138.8 பில்லியன் ரூபாய் மதுபான வரி கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் மொத்த கலால் வரி வருவாயில் மதுபான வரிகள் 34.4 சதவீதமாகப் பங்களித்தன.