
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சபையில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்.
இன்று (17) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.
அதன்படி, நாட்டின் 79வது வரவு செலவுத் திட்ட உரையான 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி திசாநாயக்க அவர்களால் இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கப்பட்டது.
அதன் பின்னர், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பிப்ரவரி 18 முதல் 25 வரை மொத்தம் ஏழு நாட்களுக்கு நடைபெறும். இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறும்.
சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.



