
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவு தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்துவதற்கு முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்காக 1000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களுக்கான போஷாக்கு உணவுக் கொடுப்பனவை 05 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 04 ஆயிரம் ரூபாயிலிருந்து 05 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாகாபொல உதவித் தொகையை 05ஆயிரம் ரூபாயிலிருந்து 7500 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் எனவும அவர் கூறினார்.
இந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் தொடக்கம் அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.



