
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.
அலெக்சாண்டர் ட்ருஃபனோவ், சாகுய் டெக்கல்-சென் மற்றும் யாயர் ஹார்ன் ஆகிய இஸ்ரேலிய கைதிகள் – நல்ல உடல் நிலையில் காணப்பட்ட நிலையில், கான் யூனிஸில் உள்ளசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கு பகரமாக மொத்தம் 369 பாலஸ்தீனியர்கள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்குக் கரைக்கு விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளில் பாதி பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீனியர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு, பசி கொடுமை பற்றி கூறுகின்றனர்.
அவர்கள் சிறையிலிருந்த கடந்த 15 மாதங்களாக சுகாதாரப் பொருட்கள் கூட மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விரின் கட்டளைப்படி – சிறையிலுள்ள அவர்கள் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு நிமிடம் குளிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
விடுதலையான கடைசி மணிநேரங்களில் கூட அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறையில் தவறாக நடத்தப்பட்டுள்னர். ஊடகங்களுடன் பேசக்கூடாது, விடுதலையைக் கொண்டாடக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் எந்த நடவடிக்கையையும் மீண்டும் தொடங்கினாலும் கொலை செய்வதாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அதனால்தான் இன்று ரமல்லாவில் விடுவிக்கப்பட்டவர்களில் பலர் ஊடகங்களுடன் பேசாததற்கு மன்னிப்பு கேட்டனர். கண்காணிக்கப்படுவது, பேச அனுமதிக்கப்படாதது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

இதையும் பாருங்கள்



