
குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் இந்த நியமனம் அமுலுக்கு வருகிறது.
மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன் மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வரும் 12ஆம் திகதி முதல் பின்வரும் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. லியனகே தனது கடமைகளில் இருந்து மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.
- இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எம்.டி.பி. தயாரத்ன, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை. செனவிரத்னவை கேகாலை மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், இரத்தினபுரி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கடமைகளை மேற்பார்வையிடவும் பதில் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் – அவரின் கடமைக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.



