
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (24) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த கணிசமான எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்களை நீக்கியதை எதிர்த்தும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிடக் கோரியும் இந்த மனுவை, மஹிந்தவின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர்.
அரசு செலவினங்களைக் காரணம் காட்டி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பதற்கு – அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய 116 பொலிஸார் அந்தக் கடமையிலிருந்து நீக்கி விட்டு, 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மட்டுமே வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது.
தொடர்பான செய்தி: மஹிந்தவின் பாதுகாப்பு 116 பேரால் குறைப்பு
இதையும் பாருங்கள்



